TCS பொன்விழா கொண்டாட்டம் : ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் என்ன..?

share on:
Classic

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி போனஸாக விலையுயர்ந்த பொருட்கள் கிடைக்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

டிசிஎஸ் நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதற்கு போனஸாக வீடுகள், கார்கள், நகைகள் ஆகியவை கிடைக்கும் என்று அதன் ஊழியர்கள் ஆவலாக காத்திருந்தனர். அவர்களுக்கு கிடைத்தது டைட்டன் வாட்ச் மட்டுமே. இதனால் ஊழியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஊழியர் ஒருவர் “ எங்கள் எல்லோருக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றம். போனஸ் பரிசு என்னவாக இருக்கும் என்று நாங்கள் ஒரு ஆண்டுக்கு மேலாக ஊகித்துக்கொண்டிருந்தோம். ஒருவேளை, வீடு, கார், நகை, மிகப்பெரிய பரிசுத்தொகை என்று ஏதாவது இருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால் டைட்டன் வாட்ச் கிடைத்தது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya