டி.சி.எஸ் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவு வெளியீடு... லாபம் எவ்வளவு தெரியுமா?

share on:
Classic

2019ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டு முடிவுகளை டிசிஎஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது. 

வணிக உலகின் மிகப்பெரிய கணிப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட டிசிஎஸ் காலாண்டு முடிவில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 8,126 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், இது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 17.7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் 18.5% அதிகரித்து ரூ. 38,010 கோடியாக இருப்பதாகவும், இது முந்தைய நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ. 32,075 கோடியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2018-19ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 21.9% உயர்ந்து ரூ. 31,472 கோடியாக நிலைகொண்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயானது 19% அதிகரித்து ரூ. 1,46,463 கோடியாக உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி, நிறுவனத்தின்  டிஜிட்டல் வருவாயானது 31% வரை மொத்த விற்பனையில் ஏற்றம் கண்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar