"வந்தே மாதரம்" பாடலை பாட மறுத்த பள்ளி ஆசிரியர்...!

share on:
Classic

பீகாரில் ’வந்தே மாதரம்’ பாடலை பாட மறுத்த பள்ளி ஆசிரியரை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பீகார் மாநிலம் கத்திஹாரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி அன்று நடைப்பெற்ற  குடியரசு தின விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் இசைக்கபட்ட போது ஆசியர் ஒருவர் பாடலை பாட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, கிராம மக்கள் ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இச்சம்பவத்தையடுத்து ஆசிரியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind