மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர்..!

share on:
Classic

நெல்லையில் குடிபோதையில் மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

நெல்லை கல்லணை மேல்நிலைப் பள்ளியில் சேக் முகமது என்பவரின் மகள் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை, பள்ளி ஆசிரியர் ஜோசப் செல்வின், மேசையை தட்டியதற்காக துடைப்பத்தால் அடித்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். ஆசிரியரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind