ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்ப இறுதிக்கெடு 

share on:
Classic

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக கருதப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பழை ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்தேர்வுகள் நெருங்கும் வேலையில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, பணிக்கு திரும்பவேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. 

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind