இரட்டிப்பாக உயர்த்தப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் : தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு..

share on:
Classic

பயனாளர்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் பெறும் மாதந்திர ஓய்வூதியத்தை தெலங்கானா மாநில அரசு இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது. 

தெலங்கானா மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தேர்தல் வாக்குறுதியான ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. முதியோர்கள், விதவைகள், கைத்தறி தொழிலாளர், யானைக்கால் நோய் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு பயனாளர்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ரூ. 1000ஆக இருந்த ஓய்வூதியம் தற்போது ரூ.2,016-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் மாற்றுத்திறனாளிகள், வயதான கலைஞர்கள் ஆகியோருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.3,016ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஓய்வூதியம் ஜூன் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கோடி செலவு ஏற்படும் எனவும், அதில் ரூ.11,800 கோடியை மாநில அரசும், ரூ.200 கோடியை மத்திய அரசும் செலவு செய்யும். 

மேலும் ஓய்வூதியம் பெறும் முதியோருக்கான வயது வரம்பு 65-லிருந்து 57-ஆக குறைக்கப்படுவதாகவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. இந்த புதிய நகராட்சி மசோதாவின் வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வரைவு மசோதாவை முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தெலங்கான சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இருஅவைகளில் இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பிறகு சட்டமாக நிறைவேற்றப்படும்.

News Counter: 
100
Loading...

Ramya