"கோயில் சிலைகளின் விவரங்களை ஆவணப்படுத்த வேண்டும்"

share on:
Classic

தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கனிமொழி, தமிழக கோயில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை முழுமையாக பதிவு செய்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துப் பேசிய, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33 பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 40 பழம்பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மீட்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தை சேர்ந்தவை என்றும் அவர் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind