சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல் 10 பேர் பலி..!!

share on:
Classic

சோமாலியாவில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விரு தாக்குதல்களுக்கும், அல்-சஹாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவு இயக்கமான அல்-சஹாப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், சோமாலியாவில் அவ்வப்போது வன்முறைத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேவேளையில், புண்ட்லாண்டில் உள்ள துறைமுகத்தில்  தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அங்கு பணியாற்றிய மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind