இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளின் பயிற்சி மையம் கண்டுபிடிப்பு..!

share on:
Classic

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் கொழும்பு நகரில்  கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத  தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.  இந்த தாக்குதல் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,  குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்பு அவர்கள் எங்கி தங்கியிருந்தனர் என தெரியவந்துள்ளது. நுவாரா எலியா என்ற நகரில் பிளாக்பூல் பகுதியில் உள்ள 2 அடுக்குமாடி   கட்டிடத்தில் இவர்கள் பயிற்சி பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ragavan