குடும்பத்திற்கு பயந்து ஓடி வந்த சவூதி பெண்ணிற்கு ஆதரவு கரம் நீட்டிய தாய்லாந்து

share on:
Classic

தன் குடும்பத்தினாரால் துன்புறுத்தப்படுவதாக கூறி பாங்காக்கில் தஞ்சம் அடைந்துள்ள 18 வயது பெண்ணிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது தாய்லாந்து.

பதற்றதை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு :

சவூதி அரேபியாவை சேர்ந்த ரஹப் முகமத் என்ற அந்த 18 வயது பெண் தன குடும்பத்தினருக்கு பயந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற போது தாய்லாந்து விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். தனது டுவிட்டர்  தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவருக்கு ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.அந்த வீடியோவில் மனித உரிமை கமிஷனிடம் முறையிட்ட அவர் "தனது குடும்பம், தன்னை துன்புறுத்துவதாகவும் அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தன்னை தாய்லாந்து விமான நிலையத்தில் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு,தாய்லாந்து அதிகாரிகள்  தன் தந்தையிடம் ஒப்படைக்க இருப்பதாக" கண்ணீருடன்  பேசியிருந்தார் 

பதிலளித்த தாய்லாந்து அரசாங்கம் :

"மனித நேயத்திற்கு முறையிடுகிறேன்" என்று அவரது பதிவில் அவர் எழுதி இருந்தார். இது குறித்து தாய்லாந்து அரசாங்கம் தனது டுவிட்டர் தலத்தில் "அவரது பாஸ்போர்ட்டை நாங்கள் பறிக்கவிலை.18 வயதுக்கு மேல் இருப்பவரின் முடிவுகளை யாராலும் தடுக்க முடியாது. அவரை தடுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமில்லை.ஆனால் அவரிடம் திரும்பி வருவதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததே காரணம்" என்று கூறியுள்ளது. 

உதவி கரம் நீட்டியது தாய்லாந்து :

அவரது இந்த வீடியோ வைரல் ஆக, தற்போது அந்த பெண்ணிற்கு உதவுவதற்கு  முன்வந்துள்ளது தாய்லாந்து அரசு "அவர் தாய்லாந்தில் தான் இருக்கிறார். யாரும் அவரை வற்புறுத்த அனுமதியில்லை அவரை காப்பாற்றுவோம்" என்று தாய்லாந்தின் குடியுரிமை முதன்மை அதிகாரி கூறியுள்ளார்.
 

மனித உரிமை கமிஷின் கூறும் ஆலோசனை:

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயன்ற மனித உரிமை " அந்த பெண் பெற்றோரை அவமதித்தற்காக கிரிமினல் குற்றவாளியாக கருதப்பட்டுள்ளார்.அதற்காக அவர் கைதும் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்று அதிகாரிகள் அவர் ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கலாம் அல்லது தாய்லாந்திலேயே அவருக்கு பாதுகாப்பு வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.  
 

News Counter: 
100
Loading...

sankaravadivu