4-வது முறையாக திருமணம் செய்தார் தாய்லாந்து மன்னர்..!

share on:
Classic

தாய்லாந்து மன்னர் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியை நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் 10வது ராமா என்று அழைக்கப்படும் 66 வயதான வஜிரா லோங்கார்ன், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது தந்தை  பூமிபோல் அதுல்யாதேஜ் மறைவுக்கு பின் அந்நாட்டின் புதிய  மன்னராக பொறுப்பேற்றார். 

நாளை மறுநாள் வஜிரா லோங்கார்னுக்கு அதிகாரப்பூர்வமாக  பட்டம் சூட்டும் விழா  நடைபெற உள்ள நிலையில்,  அவர் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியான சுஜிதா திட்ஜாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஏற்கெனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற மன்னர் வஜிரா லோங்கார்னுக்கு 7 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind