'தளபதி 63' படத்தில் புட்பால் டீம் கேப்டனாக நடிக்கும் இந்துஜா..!!

share on:
Classic

தளபதி 63 படத்தில் புட்பால் டீம கேப்டனாக நடிகை இந்துஜா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இப்போது மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, கதிர், விவேக் என ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.   

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த படத்தில் மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இவங்களுடைய கேரக்டர் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்துஜா தளபதி 63 படத்தில் புட்பால் டீம் கேப்டனா நடிக்கின்றார். மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan