தளபதி 64 பற்றிய புதிய தகவல் : விஜய்-ன் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

share on:
Classic

நடிகர் விஜய்-ன் தளபதி 64 படத்தை மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் விளையாட்டை அடிப்படையாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார். தளபதி 63 என்று அழைக்கப்படும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் முன்னரே விஜய்-ன் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64-வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் தனது கதையின் சாராம்சத்தை விஜய்யிடம் கூறியதாகவும், அது பிடித்துப்போகவே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 63-ன் படப்பிடிப்பு இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் எனவும் இந்தப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Ramya