வாக்களித்தார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி தனது வாக்கினை பதிவு செய்தனர். 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று நாகை நாடாளுமன்ற தொகுதி, தோப்புத்துறை வாக்குச்சாவடியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தனது வாக்கை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக நாடாளுமன்ற தேர்தல் திகழ்கிறது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வாக்காளர்கள் வாக்குச்சாவடியை நோக்கி திரள வேண்டும். தங்களின் ஜனநாயக கடமை தவறாது செய்ய வேண்டும் இன்று தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு, அமைச்சர்கள் கூட நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கெல்லாம் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளதோ அங்கெல்லாம் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் இரண்டு மணி நேரம் இயந்திர கோளாறு என்றால், அங்கு இரண்டு மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan