தங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி : திமுக அறிவிப்பு..

share on:
Classic

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஜூன் மாதம் திமுகவில் இணைந்தார். இந்த சூழலில் இன்று திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரை திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா, ஆ.ராசாவுடன் இணைந்து தங்க தமிழ்செல்வனும் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் திமுகவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி கலைராஜன் நியமிக்கப்பட்டுள்தாகவும், நெசவாளர் அணி செயலாளராக கே.எம் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதேபோல் தங்கதமிழ்செல்வனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya