அமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..? பரபரப்பு ஆடியோ..!

share on:
Classic

டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கத் தமிழ்செல்வன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், அக்கட்சியில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அக்கட்சியில் இருந்து தங்க தமிழ்செல்வன் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், அதிமுக அல்லது மற்ற கட்சிகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், டிடிவி.தினகரனின் உதவியாளருடன் தங்கத் தமிழ்செல்வன் தொலைபேசியில் காரசாரமாக உரையாடிய ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind