கோட்சே பற்றிய உண்மைகளை மக்களுக்கு சொல்ல அனுமதி வேண்டும் : தந்தை பெரியார் திராவிட கழகம் மனு..!

share on:
Classic

கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி என்ற தலைப்பில் விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கோட்சே பற்றிய உண்மைகளை மக்களுக்கு சொல்லும் வகையில் மயிலை மாங்கொல்லையில் மே 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 14-ம் தேதி விண்ணப்பித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விடுமுறை கால அமர்வில் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan