மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக தாவர் சந்த் கெலாட் நியமனம்..!

share on:
Classic

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக மத்திய சமூக நிதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, மாநிலங்களவை பாஜக குழுத் தலைவர் பொறுப்பு வகித்தார். உடல் நலக்குறைவு காரணமாக மத்திய அமைச்சர் பதவியோ மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளோ தனக்கு வேண்டாம் என அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இந்தநிலையில்,மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாவர் சந்த் கெலாட் மாநிலங்களை பாஜக குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பியாக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர், தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan