வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

share on:
Classic

வழக்கறிஞர் வீட்டில் 4 சவரன் தங்க நகை, லேப்டாப்  மற்றும் 1லட்சத்து 70 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த டி.ஆர்.எஸ் நகரில் வழக்கறிஞர் புலிகேசி தன்னுடைய குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று வீடுதிரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 4 சவரன் தங்கநகை மற்றும் 1லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து புலிகேலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind