தேனி : மிளகாய் சாகுபடிக்கு தண்ணீர் இல்லை என விவசாயிகள் கவலை...

share on:
Classic

தேனி சுற்றுவட்டாரத்தில் சாகுபடி செய்த மிளகாய் செடிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குன்னூர், திருமலாபுரம், மரிக்குண்டு, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடிக்கு ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தண்ணீர் இல்லாததால் மிளகாய் செடிகளில் காய்களை பறிக்க விடாமல் விட்டு விட்டதாக கூறும் விவசாயிகள், வறட்சியை சமாளிக்க நீர் ஆதாரமான குளம், ஏரி, கண்மாய்களை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan