அஞ்சறை பெட்டியில் இவ்ளோ இருக்கா..? வழுக்கை முதல் பாதம் வரை....

share on:
Classic

பொதுவா நாம் உண்ணும் எல்லா உணவுகளிலும் ஒரு அழகு சாதன பொருள் இருக்கும். இன்றைக்கு முடிய பாதுகாக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டும். உடல் ஆரோக்கியம், மன நலம், முக ஆரோக்கியம் மற்றும் முடியின் ஆரோக்கியம் ஆகிய எண்ணற்ற வகையில் இவற்றின் பயன்கள் இருக்கும். 

வழுக்கை பிரச்சனையா..? முகம் பளபளக்க வேண்டுமா..? அப்போ இத ட்ரைப்  பண்ணிப்  பாருங்க... 

முகம் பளபளக்க :

 
 மஞ்சள் 2 டீஸ்புன் 
 தேன்  3 டீஸ்புன் 

மஞ்சளை தேனுடன் கலந்து கொள்ளவும். பிறகு அதனை முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். மஞ்சளில் உள்ள அந்தோ ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பொலிவு தரும் தன்மை உங்களை பளபளவென மாற்றும். அத்துடன் தேன் உங்களின் முகத்தை வெண்மையாக ஆக்கும். 

பருக்களை போக்க : 


மிளகு தூள் மற்றும் தயிர் 1 டீஸ்புன் 
 
முதலில் மிளகு தூளை தயிருடன் கலந்து கொள்ளவும். அடுத்து அதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பருக்கள் முழுவதையும் நீக்கி விடும்.

கண் பிரச்சனை இருக்கா ?

கண்ணுல எரியுதா..? அதோடு சேர்த்து கண்ணு வீக்கமாவும் இருக்கா..?

இதற்கு சரியான தீர்வு கொத்தமல்லி விதைகள் தான். கொத்தமல்லியை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கண்ணில் விட்டுக் கொள்ளுங்கள். மேலும், சிறிது ஒத்தடமும் கொடுங்கள். இவ்வாறு செய்வதால் கண் எரிச்சல் மற்றும் கண் மங்கிய தன்மை குணமாகி விடும்.

வழுக்கை பிரச்சனையா? 

பூண்டு 3 பல் 
ஆலிவ் எண்ணெய் அரை கப்

முடி அதிகமாக உதிர்ந்து வழுக்கை விழுந்துள்ளதா..? இதற்காக ஏதேதோ செய்ய வேண்டாம். வெறும் பூண்டை வைத்தே நம்மால் எளிதாக இதற்கு தீர்வு தர முடியும்.

பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு ஒரு பாட்டிலுக்குள் போட்டு கொள்ளவும். அடுத்து பூண்டு மூழ்கும் வரை ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி கொண்டு 10 நாட்கள் ஊற வைத்து அதன்பின் தலைக்கு பயன்படுத்தலாம். அத்துடன் நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். 

News Counter: 
100
Loading...

youtube