வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

share on:
Classic

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பநிலையை பொருத்த வரை வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மிதமான மழை பதிவாகி வருவதாகவும், அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind