திருமாவளவனுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை - தமிழக காவல்துறை

share on:
Classic

திருமாவளவனுக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை என காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.சி.க. தலைவர் திருமாவளவன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும் அந்தந்த மாவட்ட காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வேண்டும் என்ற திருமாவளவனின் கோரிக்கை ஏற்க தகுந்தது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind