ராகுல் அலை என்பது இல்லவே இல்லை..தமிழிசை ஆவேசம்..!

share on:
Classic

நாட்டில் ராகுல் அலை என்பது இல்லவே இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் பாஜக மாநில தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க செல்வதற்கு முன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், மோடி அலை ஓயாது என தெரிவித்தார். மேலும், ராகுல் அலை என்பது இல்லவே இல்லை, அது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்திருந்தால் அந்த அலை தெலங்கானாவிலும், மிசோரத்திலும் அடித்திருக்கும் ஆனால் மிசோரத்தில் அவர்கள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்டாயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind