"மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை”

share on:
Classic

மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும், ஆனால் மீண்டும் பிரதமராக மோடி வரமாட்டார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். 

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும், ஆனால் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக வர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும்  ஆட்சி அமைக்கும் அளவிற்கு பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், பிறகட்சிகளின் கூட்டணியுடன் தான் ஆட்சி அமைக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  தனது குடும்பத்தில் இருந்து 2 பேர் போட்டியிடுவதால், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார்.

News Counter: 
100
Loading...

sajeev