ராஜீவ் படுகொலையில் எங்களுக்கு தொடர் இல்லை - விடுதலைப் புலிகள் இயக்கம் 

share on:
Classic

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இல்லை என அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இதற்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பே காரணம் என குற்றம்சாட்டப்பட்டு, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப்புலிகள் மீதான களங்கம் நீங்கினால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் காலம் வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் இந்த அறிக்கை இந்தியா, இலங்கை மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind