close
முகப்பு₹10,453 கோடி கடனுதவியுடன் உடன்குடி அனல்மின் திட்டம்

₹10,453 கோடி கடனுதவியுடன் உடன்குடி அனல்மின் திட்டம்

₹10,453 கோடி கடனுதவியுடன் உடன்குடி அனல்மின் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம்  உடன்குடியில் 1320 மெகாவாட் அனல்மின் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசின் நிதி உதவியுடன் 8,000 கோடி ரூபாய் செலவில் உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. தற்போது, உடன்குடி மின் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகத்துக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 12ஆம் தேதி மேற் கொள்ளப்பட்டது.

அதன்படி, அலகு 1, 2 ஆகியவற்றின் மூலம் தலா 660 மெகாவாட் வீதம் ஆயிரத்து 320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, நிலக்கரி மூலம் இயங்கும் அதி நவீன அனல் மின் நிலையம் நிறுவுவதற்கு ரூ.10,453 கோடி கடனுதவி அளிக்க வகை செய்யப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உடன்குடி மின் திட்டத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை கலைவாணர் அரங்கில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.