தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை மையம்

share on:
Classic

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பின் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind