சென்னை, காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும்..!

share on:
Classic

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பின் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan