அனல் காற்று வீசக்கூடும்...வானிலை மையம் எச்சரிக்கை..!

share on:
Classic

உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழக உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

உள்தமிழகத்தின்  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும்,பயணங்களை தவிர்த்து கொள்ளவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind