பைக்கை திருடிச் செல்லும் திருடர்கள்.. சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி..!

share on:
Classic

சென்னை வளசரவாக்கத்தில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வளசரவாக்கம் ஜெயராம் நகரை சேர்ந்த நாகராஜன், நேற்று இரவு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வாகனத்தை எடுக்கும்போது அது ஸ்டார்ட் ஆகாததால் மெக்கானிக்கை அழைத்துள்ளார். இரவு நேரம் என்பதால் மெக்கானிக் யாரும் வரவில்லை. இதையடுத்து வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு ஹோட்டல் ஊழியர்களிடம், வாகனத்தை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றுள்ளார். 

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இரவு நேரத்தில் வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக நாககராஜன் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சி கிடைத்துள்ளது. இந்த காட்சியை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev