30 ஆண்டுகளாக ஒதுக்க வைக்கப்பட்டுள்ள 30 தலித் குடும்பங்கள்.. காரணம்..?

share on:
Classic

கிராமத் தலைவர்களால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை மற்றவர்களுடம் இணைக்க கோரி 30 தலித் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட அரவக்குடி கிராமத்தில் வசித்து வரும் 120 தலித் குடும்பங்களில், 30 குடும்பங்கள் கிராமத் தலைவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த் 30 ஆண்டுகளாக தனித்து வாழும் அவர்கள், வரும் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் தாங்கள் கலந்துகொள்ள வழிவகை செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மனு அளிக்க வந்தவர்களுக்கு தலைமை தாங்கிய பழனிசாமி என்பவர் இது குறித்து பேசிய போது “ எங்கள் கிராமத்தில் வாழும் 120 தலித் குடும்பங்களில் இருந்து எங்கள் 30 குடும்பங்களை கிராமத் தலைவர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது நடந்த சில விரும்பத்தகாத செயல்கள் செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தங்கள் முன்னோர்கள் விதித்த தண்டனைகளை தற்போதைய தலைவர்களும் பின்பற்றி வருகின்றனர்” என்று தெரிவித்தார். 

எந்த பொது விஷயம் குறித்தும் விவாதிக்க எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பு விடுக்கப்படுவதில்லை. கடந்த 30 ஆண்டுகளாக எங்களிடம் இருந்து திருவிழா, விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்வுகளுக்கு வரி வசூலிக்கப்படுவதில்லை. மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது சடங்குகள் செய்யவும் எங்களை அனுமதிப்பதில்லை” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான லதா தெரிவித்தார்.

கிராமத் தலைவர்களில் ஒருவரான எஸ். சக்திவேல் கூறிய போது “ கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது அவர்கள் எதுவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது சில இடையூறுகளை ஏற்படுத்த அவர்கள் தொடங்கியுள்ளனர். எனக்கும் அவர்கள் எங்களுடன் இணைய ஆசை தான், ஆனால் அதற்கான உத்தரவை மாரியம்மன் வழங்கவில்லை, சாமி உத்தரவு கொடுக்கும் வரை அவர்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya