18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணான ஒன்று - திருமாவளவன்

share on:
Classic

18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணான ஒன்று என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் அதன் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கும் ஒன்று என்றும்,  ஜனநாயகத்திற்கு முரணான தீர்ப்பு என்றும் கூறினார்.

மேலும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது. இது தவறான முன்னுதாரணம்.

தற்போது 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே தற்போது உள்ள சூழ்நிலை. எனவே தினகரன் மேல்முறையீடு செல்லவில்லை என்றால், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே  எங்கள் கருத்து எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்த தீர்ப்பின் மூலம் திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், மத சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். 

இடை தேர்தலாக இருந்தாலும் சரி, பொது தேர்தலாக இருந்தாலும் சரி ஊழில் இல்லாத வகையில் அதன் மீது தன்னதிகாரம் எடுக்கும் இடத்தில் தேர்தல் ஆணையம் இல்லை. எனவே  எந்த தேர்தலாக இருந்தாலும் இவர்கள் அத்துமீறி தான் செயல்படுவார்கள்.

அதுமட்டுமின்றி வட மாநில பொது தேர்தலோடு இணைத்து இந்த இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை எனத் தெரிவித்தார். 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu