எல்லா மன்னர்களும் அப்படித்தான் - திருமாவளவன் எம்.பி

share on:
Classic

ராஜராஜசோழன் பற்றிய ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் M.P கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 5ம் தேதி இரவு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில்  நீலப்புலிகள் இயக்க நிறுவன தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் நடந்தது அதில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் அல்ல அது ஒரு இருண்ட காலம், அதுமட்டுமின்றி ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் என வைத்து கொண்டு மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தார்கள் என்றும் பேசினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ராஜராஜ சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என கூறியுள்ளார்.

கடந்த வாரம் முதல் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தலைப்பாக வலம் வரும் ராஜராஜசோழன் பற்றிய ரஞ்சித்தின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இன்று தொல்.திருமாவளவன்(  ) மன்னர்கள் பற்றி கூறியுள்ள கருத்து. 

News Counter: 
100
Loading...

Ramya