
உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாற்றில் சனி பகவான் ஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக உள்ளதால், சனிதோஷம் நீங்க வேண்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிரணாம்பிகை உள்ளிட்ட பிரதான தெய்வங்களுக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் புனித நீர் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.