மருத்துவமனை மாடியிலிருந்து விழுந்து நோயாளி பலி...

share on:
Classic

திருப்போரூரில் மருத்துவமனை மாடியிலிருந்து விழுந்து நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அடுத்தடுத்த ஆக்‌ஷன்கள்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த பையனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் அம்மாபேட்டை பகுதியில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை செல்வம் தலையில் அடிபட்டு இறந்ததாக தொலைபேசி மூலம் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இவர்கள்  மருத்துவமனை செல்வதற்குள் போலீசார் உதவியுடன் உடல் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மரணத்தில் சந்தேகம்:
இந்த விபத்தால் ஆக்ரோஷமடைந்த இறந்தவரின் உறவினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்து செல்வத்தின் குடும்பத்தினருக்கு போதிய இழப்பீடு கொடுக்கும்படி வலியுறுத்தினர். 

இதுகுறித்து இறந்தவரின் மகன் சதீஷ்குமார் அளித்த புகாரை அடுத்து கொலையா? தற்கொலையா? தவறி விழுந்திருப்பாரா? அல்லது யாராவது மாடியிலிருந்து தள்ளி விட்டிருப்பார்களா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

வலுக்கும் சந்தேகம்:
மருத்துவமனை வளாகத்தில் நடந்த இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,  இதேபோன்று கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி நோயாளி ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
 இச்சம்பவம் பற்றி பேசிய பொதுமக்கள், மருத்துவர்களின் அலட்சிய போக்கால் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள்   நடைபெறுவதாக தெரிவித்தனர். மேலும், நோயாளிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

mayakumar