சாய ஆலையில் 4 பேர் உயிரிழந்த விவகாரம் : சாய ஆலைக்கு சீல் வைக்க உத்தரவு

share on:
Classic

திருப்பூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாய ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம் பாளையம் பகுதியில் சாய ஆலை கழிவு தொட்டியை சுத்தம் செய்ய உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு என்ற நான்கு வட மாநில தொழிலாளர்கள் இறங்கினர். அப்போது கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கியதில் நான்கு பேரும் உயிரிழந்தனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் சாய ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கவும், ஆலைக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind