’ தோள் கொடு தோழா’ திரைப்படத்தின் துவக்க விழா..!!

share on:
Classic

ஜெய் ஆகாஷ் நடிக்கும் தோள் கொடு தோழா திரைப்படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற்றது.

‘ரோஜா மாளிகை’ என்கிற படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் "தோள் கொடு தோழா". நட்புக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை சேர்ந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். புது முகங்கள் ஹரி, ராகுல், பிரேம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

மேலும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, லியோ பீட்டர் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெளதம். இந்த படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டு அன்று நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். 
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan