தோப்பு வெங்கடாசலம் அதிமுக பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம்..!

share on:
Classic

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக முதலமைச்சர் பழனிசாமிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாச்சலம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிடம் சேலத்தில் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் தற்போது சூழ்நிலை காரணமாக மனவேதனையுடன் அதிமுக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். தோப்பு வெங்கடாச்சலம் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்திருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan