உ.பி.யில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுக்கொலை

share on:
Classic

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகரில் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டு வீழ்த்தினர். 

முஸாஃபர்நகரில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் விவசாய விளைநிலங்களுக்கு மத்தியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் குற்றவாளிகளை சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind