3 முறை நிராகரிக்கப்பட்ட பிரக்ஸிட் ஒப்பந்தம் : அடுத்த மாதம் மீண்டும் வாக்கெடுப்பு..

share on:
Classic

மூன்றுமுறை நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் வாக்கெடுப்பு மீண்டும் ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்ததை அந்நாட்டு பிரதமர் தெரசா மே தயார் செய்தார். இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்றுமுறை நடத்தப்பட்டது. இந்த  ஒப்பந்தத்தில் உள்ள வரைமுறைகளில் பிரிட்டன் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டதால், வாக்கெடுப்பு 3 முறையும் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு பிரதமர் தெரசா மே காலஅவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசம் அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு மீண்டும் நான்காவது முறையாக வருகிற ஜூன் மாதம் நடைபெறும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya