3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வலுக்கும் போராட்டம்..

share on:
Classic

காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள சம்பல் என்ற கடந்த வாரம் புதன்கிழமை இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. 3 வயது சிறுமிக்கு சாக்லேட்களை கொடுத்து தனியாக அழைத்து சென்ற 20 வயது இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் சிறுமியை கண்டுபிடித்த பெற்றோர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஜம்மு மாநிலத்தில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. குற்றவாளி சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார் என்று உறுதியளித்த பந்திப்போரா மாவட்ட துணை கமிஷ்னர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, இது போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்க்க்கு தண்டனை வழங்க கடுமையான சட்டங்கள் தேவை என முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Ramya