‘தும்பா’ படம் வரும் மே 17-ஆம் தேதி வெளியாகும் என தகவல்..!!

share on:
Classic

ஃபண்டஸி கலந்த படமாக உருவாகும் தும்பா படம் வரும் மே 17-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் தும்பா. ஃபண்டஸி கலந்த படமாக உருவாகும் இந்த படத்தில் கனா படத்தில் நடித்த தர்ஷன், கீர்த்தி பாண்டியன், சின்னத்திரை புகழ் தீனா என பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாகிருக்கும் இந்த தும்பா படத்திற்கு விவேக் மெர்வின் மற்றும் அனிருத்  பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சந்தோஷ் தயாநிதி, பின்னனி இசை பணிகளை கவனிக்கின்றனர். ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் இந்த படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும்  ஜில்பெரா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.  சென்சாரில் யூ சான்றிதழை பெற்ற இந்த தும்பா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வரும் 17-ஆம் தேதி வெளியாகிறது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan