'தும்பா' படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டம்..!!

share on:
Classic

தும்பா படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் தும்பா.  முழுக்க முழுக்க ஃபண்டஸி  கலந்த படமாக உருவாகும் இந்த படத்தில் கனா படத்தில் நடித்த தர்ஷன், கீர்த்தி பாண்டியன், சின்னத்திரை புகழ் தீனா என பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாகிருக்கும் இந்த தும்பா படத்திற்கு  விவேக் மெர்வின் மற்றும் அனிருத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சந்தோஷ் தயாநிதி. பின்னனி இசை பணிகளை கவனிக்கின்றார். 

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று சில நாட்களிலே 14 லட்சம் பார்வையாளர்களை கடந்துருக்கும் நிலையில் இப்போது இந்த படத்தின் ஜில்பெறா பாடலின் ப்ரொமோ விடியோவை தும்பா படக்குழு வெளியிட்டுருக்காங்க. ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த தும்பா படத்தை வரும் மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan