குளிர்சாதன, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் கட்டணம் குறைப்பு

share on:
Classic

தமிழகத்தில் அரசு விரைவு  போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும், குளிர்சாதன, படுக்கை வசதி பேருந்துகளில் கட்டணம் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் 60 குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகள் தற்போது இயக்கத்துக்கு வந்தன. இதில், குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் 25 பைசாவும், சாதாரண படுக்கை பேருந்துகளுக்கு, 1 ரூபாய் 55 பைசாவும், கழிப்பிட வசதியுடன் கூடிய, 'கிளாசிக்' பேருந்துகளுக்கு 1 ரூபாய் 15 பைசாவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 

இது, ஆம்னி பஸ்களின் கட்டணத்தை விட கூடுதலாக இருந்ததால், பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. இதனால், கட்டணத்தை குறைப்பதற்கு அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்தனர். 

அதனை ஏற்ற அரசு,  குளிர்சாதன படுக்கை பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 45 காசுகளும், சாதாரண படுக்கை பேருந்துகளுக்கு 20 காசும், கிளாசிக்  பேருந்துகளுக்கு 10 காசும் என மொத்த கிலோ மீட்டர் அடிப்படையில், 25 முதல் 35 ரூபாய் வரை குறைத்துள்ளது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த இந்த பேருந்து கட்டண குறைப்பு பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind