ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகம்..!!

share on:
Classic

சென்னையில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி வரும் ஏப்ரல் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆயிரத்து 300 ரூபாய், இரண்டாயிரத்து 500 ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 6 ஆயிரத்து 500 ரூபாய் என நான்கு பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஏற்கனவே நடந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan