வீட்டிற்குள் புகுந்த புலி... அலறிய மக்கள்...!

share on:
Classic

வீட்டிற்குள் புகுந்து படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலியை பார்த்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

கடந்த 4 நாட்களாக வெள்ளத்தால் உருகுலைந்த அஸ்ஸாமில் மக்களின் பலி எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1,50,947 மக்கள் 427 அரசு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா 95% வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை 30-ல் இருந்து 52-ஆக அதிகரித்துள்ளது. 57-க்கும் மேற்பட்ட விலங்குகளை வன விலங்கு அதிகாரிகள் மீட்டனர். 

இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து தப்பிய புலி ஒன்று, அருகாமையில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. புலியை பார்த்த மக்கள் வன விலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். புலியை மீட்க இந்திய வனவிலங்கு அறக்கட்டளை ஒரு குழுவை அனுப்பியது. புலியை பத்திரமாக மீட்ட அதிகாரிகள் புலியின் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

News Counter: 
100
Loading...

udhaya