பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று.. அயோத்தியில் 144 தடை உத்தரவு..

share on:
Classic

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவாக இந்து அமைப்புகளும், எதிராக முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளன.

இதை கருத்தில் கொண்டு அயோத்தியில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும், உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் குவிக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth