போலீஸ் கார் மீது அமர்ந்து டிக் டாக் வீடியோ : சர்ச்சையில் சிக்கிய அமைச்சரின் பேரன்..

share on:
Classic

தெலங்கானா உள்துறை அமைச்சரின் பேரன், போலீஸ் காரின் மேல் அமர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மைக் காலங்களாக டிக் டாக் செயலி மூலம் வீடியோ வெளியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் அதிகமாகவே உள்ளது. காவலர் உடையில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை டிக் டாக்கில் பதிவு செய்வது, அரசு அதிகாரிகள் பணி நேரத்தில் டிக் டாக்கில் வீடியோ எடுப்பது போன்ற சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அரங்கேறி வருகின்றன. தற்போது அதுபோன்ற சம்பவம் தான் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் முகமது அலியின் பேரன் ஃபர்கன் அகமதுவின் டிக்டாக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் காவல்துறையினர் வாகனத்தின் மீது மற்றொரு நபருடன் அமர்ந்து ஐஜி தர அளவிலான அதிகாரியை மிரட்டும் வகையிலான சினிமா பாடலுக்கு வாயசைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுதொடர்பாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தன்னுடைய பேரன் காரின் மீது மட்டுமே அமர்ந்திருந்தாகவும், யாரோ ஒரு உள்ளூர் நபர் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya