மலச்சிக்கல் மனுஷனுக்கு பலச்சிக்கல் ? என்ன செய்தால் சரி ஆகும் ? 

share on:
Classic

சாப்பிட்றதுக்கு தான் வாழுறோம். ஆனா அது செரிக்க சில டிப்ஸ் தேடி வலைத்தளங்களில் தேடி கலைத்து அலுத்துப் போய் எதையோ செய்து இறுதியாக மருத்துவரை நாடிச் செல்கின்றனர் இன்றைய தலைமுறையினர். இதற்கு இயற்கை வழியில் என்ன செய்யலாம். 

ஒருவருக்கு வாரத்திற்கு மூன்று முறைக்கு குறைவாக மலம் போவது மலச்சிக்கல். இதற்கு எளிய முறையில் தீர்வு காணலாம். 

சரியான உணவு முறைகளை பின்பற்றி உடலுக்கு தேவையான நீர் அருந்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

மலம் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வரும் போதே காலம் தாழ்த்தாமல் வேலையை முடிக்க வேண்டும். மாறாக பிறகு பார்த்து கொள்ளலாம் என எண்ணினால் கடும் சிக்கலோ சிக்கல் தான். 

நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்து கொள்ளுதல் சிறந்தது. பச்சை நிற காய்கறிகள் , வாழைத் தண்டு ,  பொட்டுக்கடலை ,கீரை, ஆரஞ்சு  , கொய்யா , மாதுளை , ஆப்பிள் , என பழவகைகளும், கீரை வகைகளும் உடலுக்கு ஏற்றது. அவற்றை உட்கொண்டால் இந்த சிக்கலே வராது. 

தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவை மனதையும் உடலையும் சுத்தப்படுத்தும். கடைகளில் விரைவு உணவு உண்பது, தேவை இல்லாத கொழுப்பு வகைகளை அதிகம் உண்பது , இறைச்சி அதிகம் உட்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்று. இவற்றை கடைபிடித்தால் மலச்சிக்கலை தவிர்க்கலாம். 

News Counter: 
100
Loading...

sankaravadivu